தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் – ஆளுநர், முதல்வர் வரவேற்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

சென்னை மற்றும் வேலூரில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில், ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை : மே-04

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சபாநாயகர் தனபால் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் வேலூர் சென்றார். அங்கு சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவக்கல்லூரி நூற்றாண்டு விழா, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிறுநீரக மாற்று, இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பின்னர் ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்கக்கோவிலுக்கு சென்று ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மாலை 5.40 மணிக்கு சென்னை திரும்பும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார். நாளை சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழா, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் குரு அமர் தாஸ் மற்றும் சாகித் பாபா தீப் சிங் கட்டிட அரங்குகள் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்ளவுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts