தமிழகம் வருகைபுரியும் ஃபின்லாந்து கல்வியாளர்கள்

ஆசிரியர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி வழங்க ஃபின்லாந்து கல்வியாளர்கள் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஃபின்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஃபின்லாந்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் போதே மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார்.

புதிதாக வரவுள்ள கல்விமுறையில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவதற்கான பணிகளை முதலமைச்சர் ஒப்புதலோடு தொடங்கவுள்ளதாக அவர் கூறினார். மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts