தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்

ராணுவ கண்காட்சிக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஏப்ரல்-11

சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கியதாக தெரிவித்தார். மேலும், தென்னந்திய மாநில நிதியமைச்சர் மாநாட்டில் தமிழகம் பங்கேற்காததில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ராணுவ கண்காட்சிக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.

Related Posts