தமிழகம் வாக்குப்பதிவுக்கு முழுமையக தயாராகிவிட்டது:  சத்யபிரதா சாகு 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கடந்த 3 நாட்களாக PSK குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கோடியே 50 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும், இந்த பணத்திற்கும் தேர்தலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வந்துள்ளதாகவும், மீதம் உள்ள 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்து சேர்வார்கள் என்றும் தெரிவித்தார்.

திரையுலகப் பிரபலங்கள் மற்றும் நட்சத்திர விளையாட்டு வீரர்கள் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் சத்தியபிரதா சாகு வேண்டுகோள் விடுத்தார்.

Related Posts