தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவுள்ள சிறப்புகுழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி நசிமுதீன் இணைந்து பணியாற்ற முடியுமா? என தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நசிமுதீன் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவுள்ள சிறப்புகுழுவில் முன்னாள் சுற்றுச்சூழல்துறை செயலாளரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான நசிமுதீன் இணைந்து பணியாற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்  வழக்கை வரும் செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

Related Posts