தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 342 புள்ளி 22 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணையை  ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக  நிலம் திரும்பப் பெறப்பட்டதாக சிப்காட் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை பொதுமேலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கான நிலத்தை திரும்பப் பெற்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts