தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தென்கால் கண்மாய் சீரமைப்பு பணிகள் தீவிரம்

தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு நாட்டில் உள்ள அனைத்து குளங்கள் நீர்நிலைகள் கண்மாய்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திருப்பரங்குன்றம் விளாச்சேரி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் அமைப்பதற்காக 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கண்மாயில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Posts