தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி : நிதிநிலை அறிக்கை தாக்கல்

2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 44 ஆயிரத்து176 கோடி ரூபாய் இருக்கும் என நிதிநிலை அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை  இன்று காலை கூடியதும் நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது  2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது எனவும்,  அரசின் செலவினங்கள் 2 லட்சத்து 08 ஆயிரத்து,671கோடி ரூபாயாக  இருக்கும்.  எனவும் தெரிவித்தார். வருவாய் பற்றாக்குறை 10 ஆயிரத்து 950 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 44 ஆயிரத்து176 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும், நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு 284 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்டித் தரப்படும்எனவும்,  இதற்காக நிதிநிலை அறிக்கையில் ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

Related Posts