தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

இந்தியாவிலேயே  முதல்முறையாக தமிழகத்தில் மாணவர்களின் வருகையை பேஸ் ரீடிங் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர், கூடக்கரை உள்ளிட்ட ஏழு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் 800க்கும் மேற்பட்டோருக்கு தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு 12- ஆம் வகுப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு உறுதியளிக்கும் கல்வி முறை அமல்படுத்தப்பட உள்ளது எனவும், இந்த கல்வி முறையை இந்திய அரசே வியந்து பாராட்டியுள்ளதாகவும் கூறினார்

முன்னதாக கடத்தூர் மேல்நிலைப்பள்ளியில் 1புள்ளி 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறைகளுக்கான பூமி பூஜையில் அமைச்சர் கலந்து கெண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் வருகை பதிவை பதிவு செய்ய இந்தியாவில் முதல்முறையாக பேஸ் ரீடிங் முறைகொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்தார். சீருடைகள் தைப்பதில் குளறுபடிகள் நடைபெறுவதை தடுக்க மாற்று வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாக அமைச்சர் கூறினார்.

Related Posts