தமிழக அரசுக்கு எச்சரிக்கை: வைகோ

சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு ஏதாவது நடந்து இருந்தால் தமிழக அரசுக்கு அது கேடாக அமையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  எச்சரித்துள்ளார். .

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் முகிலன் ஆவணப்படம் ஒன்றை  வெளியிட்ட. அன்றைய தினமே காணாமல் போய் உள்ளார் என்றும்   இரவு 12.45மணிவரை தொடர்பில் இருந்துள்ளார் என்றும் கூறினார். முகிலன் காணாமல் போய் 12 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில் இதுதொடர்பாக அவரது மகன், மற்றும்  ஹென்றி திபேன் போன்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முகிலன் விவாகரத்தில் அரசின் நடவடிக்கை  சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் முகிலனுக்கு ஏதாவது நடந்து இருந்தால் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட வைகோ , முகிலனுக்கு ஏதாவது நடந்து இருந்தால் அரசுக்கு அது கேடாக அமையும் என  எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய வைகோ ,வரும் 1ம் தேதி கன்னியாகுமரி வரும் மோடிக்கு எதிராக  கருப்பு கொடி காட்டப்படும் என்றார்.முல்லை பெரியாரில் புதிய அணை கட்ட ஆய்வறிக்கை தயாரிக்க  அனுமதி கொடுத்தது,  ,நீட் விவகாரம், 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம், ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வாராதது, உயர் மின் கோபுர விவகாரம், நியூட்ரினோ திட்டம் , சமஸ்கிருதம் திணிப்பு போன்றவற்றிக்கு எதிராக கருப்பு கொடி அறப் போராட்டம் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக, மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும்,திருச்சியில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்த வைகோ,  இன்னும் ஆட்சிமன்ற குழு கூடவே இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

Related Posts