தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிலை வழக்கு தொடர்பான கடித பரிமாற்றங்களை செப்டம்பர் 7ஆம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவதற்கு முன்பு, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றங்கள் குறித்த விபரத்தை வரும் 7ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் அனுமதியளித்தனர்

Related Posts