தமிழக அரசே பழுது பட்டு இருக்கிறது:   கமல்ஹாசன் குற்றம்சாட்டு

கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார், அப்போது  மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5 நோயாளிகள் இறந்தது குறித்து செய்தியாளர்களுக்கு கேள்விக்கு பதிலளித்த அவர்  தமிழக அரசே பழுது பட்டு இருப்பதாகவும் டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வந்தாலும் மீட்டெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.  சூலூர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட தடை கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஒருவரின் மனைவி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், அந்த விவகாரத்தில் வேறு கட்சிகளின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து கோவையை சென்றடைந்த கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சவுகரியம் போல் பேசுவதாகவும் இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

Related Posts