தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்? – ப.சிதம்பரம் கேள்வி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்? என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : ஜூன்-29

 உள்ளாட்சி அமைப்புகளில் தனிஅதிகாரிகள் பதவி நீட்டிப்பு மசோதா குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்க பதிவில்,பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை, தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்? என்றும்  கேட்டுள்ள ப.சிதம்பரம், அஇஅதிமுகவிற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும்? என்றும்  வினவியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே? என்றும் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Posts