தமிழக ஆளுநருக்கு எதிராக போராடினால், 7 ஆண்டுகள் தண்டனை என கூறுவது ராணுவ ஆட்சி போல் உள்ளது

தமிழக ஆளுநருக்கு எதிராக போராடினால், 7 ஆண்டுகள் தண்டனை என கூறுவது ராணுவ ஆட்சி போல் உள்ளது என்று ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கரூர் : ஜூன்-25

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஆளுநருக்‍கு எதிரான போராட்டங்களை ஒடுக்‍க சிறைத்தண்டனையை காட்டி மிரட்டல் விடுப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தும் முன், விவசாயிகளையும், பொதுமக்‍களையும் அரசு கலந்தாலோசித்திருக்‍க வேண்டும் என கூறிய அவர், இதனை அரசு அவசர அவசரமாக செயல்படுத்துவதற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்று தெரிவித்தார்.

Related Posts