தமிழக ஆளுநர் மீது காவல் ஆணையரிடம் மாணவி புதிய புகார்

 

 

பெண் நிருபரின் கன்னத்தில் தட்டிக்கொடுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

சென்னை, ஏப்ரல்-19 

பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு  அழைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பெயர் இடம் பெற்றது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் சென்னையில் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார். இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், பெண் நிருபரிடம் ஆளுநர் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது சட்டக்கல்லூரி மாணவி நந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பெண் செய்தியாளரை கன்னத்தில் தொட்ட விவகாரத்தில் ஆளுநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts