தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைவு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ள நிலையில், ஒகேனகல்லுக்கும் நீர்வத்து குறைந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க 50-வது நாளாகவும், பரிசல் இயக்க 22-வது நாளாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியில் இருந்து 27 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்துள்ளது.

Related Posts