தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு  ஸ்டாலின் வாழ்த்து 

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில், ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்கான பதக்கக் கணக்கில் முதல் தங்கத்தை கோமதி மாரிமுத்து பெற்றுக் கொடுத்துள்ளார். 2 நிமிடம் 2.7 வினாடியில் அவர் இலக்கை எட்டினார். இந்நிலையில் தமிழக வீராங்கனை கோமதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்த கோமதி, மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்

Related Posts