தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 4-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்

அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை ஒதுக்குவதற்காக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 4-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை : மே-10

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சட்டசபையின் நிகழ்ச்சிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறிய பின்பு, அரசின் ஒவ்வொரு துறைகளும் அவற்றின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியைப் பெறவேண்டும். இதற்கு சட்டசபையில் விவாதிக்கப்பட்டு, அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக துறை வாரியான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக சட்டசபை மீண்டும் கூட்டப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அரசு துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடரை வரும் ஜூன் 4 ஆம் தேதி அல்லது ஜூன் 18-ந் தேதியன்று தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts