தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது பேரவைத் தலைவர் தனபாலிடம் , கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக்கோரி,  அவர்களுக்கு பேரவைத் தலைவர்  நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்தது. இதைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  ஆனால், பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும்  தடை கோரி நீதிமன்றம் செல்ல விருப்பமில்லை எனவும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில்  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்ததுடன்.  வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால, 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் பேரவைத் தலைவர் தகுதிநீக்க நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. இந்த தடை உத்தரவு பிரபுவுக்கு அனுப்பிய நோட்டீசுக்கும் பொருந்தும் என கூறப்பட்டது. ஆனாலும் பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்க மேலும் ஒருவாரம் அவகாசம் வேண்டும் என சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் பிரபு நேற்று. மனு அளித்தார். இந்நிலையில், பேரவைத் தலைவர்நோட்டீசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தனக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Posts