தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 29 தேதி தொடங்கி, ஜூலை 9 ஆம் தேதி வரை நடைபெறும்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 29 தேதி தொடங்கி, ஜூலை 9 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-24

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 22 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு, அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற தமிழக சட்டப்பேரவை வரும் 29 ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை தலைவர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இந்தக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 29 தேதி தொடங்கி, ஜூலை 9 ஆம் தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

Related Posts