தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக தலைமை தகவல் ஆணையர் ஷீலா நாயர் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆணையர் தேர்வு செய்யப்படவுள்ளார். இந்நிலையில், இப்பதவிக்கு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் வாழ்க்கை முறையை நன்கு அறிந்ததவர்கள், சட்டத்தில் முன் அனுபவம் கொண்டவர்கள், அறிவியல்,தொழில்நுட்பம், நிர்வாகம், உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குபவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவோ, அரசியல் கட்சியில் உள்ளவராகவோ ஆதாயம் தரும் பதவிகளில் உள்ளவராகவோ இருக்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts