தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக 275 பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிதாக 275 பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 21 ஆயிரத்து 678 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த மக்களும் தமிழக அரசு பேருந்து சேவையின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 17 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 72 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 43 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 75 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 68 பேருந்துகளும், என மொத்தம் 68 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 275 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.    தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Posts