தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வில்லன்: நடிகர் உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின், சந்தைரோடு, பைபாஸ் சாலை, கோபால்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், தி.மு.க. பதவி ஏற்றவுடன் விவசாய கடன், கல்விக்கடன், நகைக்கடன் ஆகியவை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறிய அவர், நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழந்தார் எனவும், எனவே நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts