தமிழக மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி வழங்கப்படும்

வெளிநாடுகளை போல் தமிழகத்திலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார். விடுமுறை நாட்களில் மாணவர்களை அப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில் ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு பயணம்  மேற்கொண்டதாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள், தமிழ் நூலகங்கள் அமைத்துத் தர கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி அவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் பண்பாடு குறித்த புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts