தமிழக மாணவர்களுக்கு போக்குவரத்து செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு போக்குவரத்து செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : மே-04

கோவையில் குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்டம் சூலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சிக்கு பயந்து திமுகவினர் மீது காவல்துறை பொய் வழக்கு புனைந்துள்ளது என குற்றம்சாட்டினார். குட்காவுக்கு எதிரான போராட்டம் மக்களுக்கான போராட்டம் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்தவர் என ஆவேசமுடன் தெரிவித்தார். நீட் தேர்வு எழுதுவதற்காக, வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மு.க. ஸ்டாலின், சிறப்பு பேருந்து, விமான கட்டணம், பெற்றோருடன் தங்குவதற்கு வசதி உள்ளிட்ட வசதிகளை மாணவர்களுக்கு அரசு செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Posts