தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யாழ்ப்பாணம் நீரியல் மீன்பிடித்திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் இலங்கை கடற்படை கைது செய்தது.

வடக்கு கடற்படை மூலம் நெடுந்தீவு கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, இலங்கை பிராந்திய கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்த  மீனவர்களை கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் தற்போது  ஒப்படைக்கப்பட்டனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யாழ்ப்பாணம் நீரியல் மீன்பிடித்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts