தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வரும்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

டீசல் விலையை குறைக்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வரும்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததால் சேதமடைந்த  மீனவர்களின் படகுகளை சீரமைக்க நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 3ந் தேதி முதல்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வது என கடந்த 30-ந் தேதி நடைபெற்ற தமிழக  மீனவர் சங்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதன்படி  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், வரும் 8-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts