தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட ஆட்சியாக உள்ளது

தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட ஆட்சியாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

      திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் விவகாரத்தில் பிரதமர் இன்னும் மெளனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியானது மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட ஆட்சியாக உள்ளதாக கூறிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அதிகாரத்தை பயன்படுத்தாமல் தமிழக அரசு மத்திய அரசின் ஏஜண்டாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எல்லாத்துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாகவும், முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளில், தொலைகாட்சி தொடர் போல், லஞ்ச சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சாமானியர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்யும் தமிழக அரசானது, மத்திய அரசின் பினாமியாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மக்களின் ஆதரவை இழந்துவிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தினார்.

Related Posts