தமிழக முதலமைச்சர் வெளிநாடு செல்வதன் மூலம் கிடைக்கும் முதலீடு நாட்டுக்கானதா ?

தமிழக முதலமைச்சர் வெளிநாடு செல்வதன் மூலம் கிடைக்கும் முதலீடு நாட்டுக்கானதா ? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

சென்னை அண்ணா நகரில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்கள் பணியாற்றுவதில் என்றைக்கும் பின் வாங்கியது இல்லை எனவும், மக்களை மட்டுமின்றி நாட்டையும் பாதுகாக்கும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது எனவும் கூறினார்.

பைட்

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்று பயணம் நாட்டிற்கு பயன்படும் வகையில் அமையுமா என கேள்வி எழுப்பினார்.

பைட்

இந்த திருமண நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts