தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு முதல் அமைச்சர் வாழ்த்து

கத்தார் நாட்டின் தோகாவில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.  இதில் பெண்களுக்கான 800 மீட்டர் இந்திய வீராங்கனை  கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். ஓட்டப்பந்தயத்தில்

தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.  இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.  தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

இதுபோன்று சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

 

Related Posts