தமிழிகத்தில் மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடிகளில் 7,780பதற்றமானவை:சத்யபிரத சாகு

Want create site? Find Free WordPress Themes and plugins.

சென்னையில் இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5 புள்ளி 99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனவும், இந்த தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 94 ஆயிரத்து 653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். . பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம், தொகுதிக்கு ஒன்று அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும்,  மொத்தம் உள்ள 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடி மையங்களில் 7 ஆயிரத்து 780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பிற 13 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம் எனவும்,  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்..தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 127புள்ளி 66 கோடி ரூபாய்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும்,  இதில் 62 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 284 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4 ஆயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு  கூறினார். தலைமை தேர்தல் அதிகாரியின் பேச்சு,வாய்பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கும் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts