தமிழிசை, தாமரையை சாக்கடையில் நட்டால் எப்படி மலரும் -கே.எஸ். அழகிரி


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி போடுகிறார். இவரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று தூத்துக்குடி வ.உ.சி. சந்தை அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு கூட்டணி பேச்சுவார்த்தையை வெறும் நான்கு மணி நேரத்திற்குள் முடிக்க கூடிய திறன் படைத்தவர். மக்கள் பிரச்சனைகளை தான் சொல்ல வேண்டிய விஷயங்களை மிகவும் தெளிவாகவும், நளினமாகவும் எடுத்து வைக்க தெரிந்தவர். சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் எனும் பெயர் பெற்றவர். தற்போது நாட்டில் மீதமிருக்கும் 20 சதவீத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் வழங்குவோம் என அறிவிப்பு செய்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியின் கைகளில்தான் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று கூறுகிறார். ஆனால் அப்படி பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, மோடியின் கைகளில் பாதுகாப்பாக இல்லை. ஏனெனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மீது அவ்வளவு வழக்குகள் போடப்பட்டு உள்ளது. ஆகவே அவரை தற்காத்துக்கொள்ள கொள்ளவும் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டின் போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு கொடுத்தது யார் எனத்தெரியவில்லை எனக்கூறுகிறார். நானே தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என முதல்வர் பதில் கூறுகிறார் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் கடலில் தாமரை மலரும் என கூறுகிறார். தாமரை என்பது சேற்றில் வளரக்கூடியது. அதனை அவர் ஓர்  நல்ல இடத்தில் நட்டு வைத்தால் தாமரை மலரும். ஆனால் அவர் சாக்கடையில் நடுகிறார் என்றால் தாமரை எப்படி மலரும் எனக்கூறினார்

Related Posts