தமிழ்கத்தில் இருவேறு இடங்களில் வாகன விபத்து: ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலி

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

சென்னையை அடுத்த பம்மல் எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் நேற்றிரவு திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தார்.  திருவள்ளூர் – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்த கார் மீது  எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் சந்திரசேகர் அவரது மனைவி புஷ்கலா மற்றும் மூன்று வயது மகன் தருண் ஆகியோர் சம்பவ இட்த்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை நிகழ்த்திய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் சீலாப்பாடியை சேர்ந்தவர் அக்பர். இவர் தனது மனைவி பாரிசாபேகத்துடன் இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் நோக்கி மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாரிசாபேகம் தூக்கிவீசப்பட்டு சம்பவ இட்த்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் பாரிசாபேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts