தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் 130 ரூபாயா குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 130  ரூபாய் + ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த அறிவிப்பானது வேலூர் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களுக்கு பொருந்தும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பானது அனலாக் முறையிலிருந்த போது 70 ரூபாய் மாதக்கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்,மத்திய அரசிடம் இருந்து முறையான ஒப்புதல் பெற்று டிஜிட்டல் ஒளிபரப்பு முறைக்கு மாற்றம் பெற்றது. அப்போது 200 ரூபாயாக கட்டணமாக வசூலிக்கப்பட்டது.    தற்போது 130 ரூபாய் + ஜிஎஸ்டி என அதிமுக அரசு இத்தகைய கட்டணக் குறைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலேயே இத்தகைய உரிமம் பெற்ற முதல் அரசு கேபிள் தமிழக அரசுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts