தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வரமாட்டார் என தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வரமாட்டார் என தற்போதைய தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மேலிடத்தின் அழைப்பின் பேரில் டெல்லி சென்ற அவர், முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்தார்.சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மட்டுமல்ல , ஒட்டுமொத்த அமைச்சரவை மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது எனவும், அதுகுறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். டெல்லியில் நாளை மறுநாள் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார் எனவும், அதில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம்,ஆனால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்

Related Posts