தமிழ்நாடு பிரிமியர் லீக் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன்

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்றன.இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்து.சேப்பாக் அணி சார்பில் சசிதேவ் 44 ரன்களையும்,அஸ்வின் 28 ரன்களையும் எடுத்தனர்.

இதை அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெரியசாமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Posts