தமிழ்நாடு முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்

அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை : மே-28

தமிழ்நாட்டில், கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் என அறியப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. திருத்தணி, வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் அவ்வப்போது வெயில் சதத்தை தொட்டு வந்தது. வெயில் தகிக்கும் மாவட்டங்களில் இந்தாண்டு அவ்வப்போது மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. இந்த சூழலில், இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை பதிவாகி வருகிறது. இதனால், தென்கிழக்கு அரபி கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால், அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Posts