தமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்:அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

தமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் என அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் “பாரதி வீர சுதந்திர கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்புரை வழங்க,அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்துரை வழங்கினார். கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில்”  திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத்திற்குபாரதி விருதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். பாரதியார் கவிஞர், பத்திரிகையாளர், போராட்ட வீர்ர் என பன்முக திறமை கொண்டவர் எனவும்,பெண் உரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடியவர் பாரதி எனவும் புகழாரம் சூட்டினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அமைச்சர் பாண்டியராஜன்,

தமிழ்நாட்டில் ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் ஆங்கில மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ளன எனவும் இவற்றின் பெயர்கள்தமிழில் மாற்றப்படும் என்றும் தெரிவித்தார். அதன்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் பரிந்துரையின் பேரில் சுமார் 3 ஆயிரம் பெயர்கள் மாற்றப்பட இருப்பதாகவும், இதற்கான அரசாணை 2 வாரங்களுக்குள் பிறப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார். சென்னை காந்தி மண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் வகையில் நிரந்தர கண்காட்சி அமைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

Related Posts