தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 64 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருது

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 64 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

சென்னை : ஏப்ரல்-05

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் என்ற விருது ஏற்படுத்தப்பட்டு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2016, 2017 ஆகிய ஆண்டுகளுக்கு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 64 பேரை தமிழ்ச் செம்மல் விருதுபெற தேர்வு செய்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்ச்செம்மல் விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் தகுதியுரை வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Posts