தம்மை நீக்க முயற்சி செய்வது வரலாற்று ஊழல் : ட்ரம்ப்

அதிபர் பதவியை  விட்டு தம்மை நீக்க முயற்சி செய்வது வரலாற்று ஊழல் என்று ஜனநாயக கட்சியை டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மகன் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி, உக்ரேன் அதிபரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்புகாரை அடுத்து அதிபர் ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி தொடங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், தம்மை நீக்க திட்டமிடும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி, அமெரிக்க அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பிடெனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரேனில் பணியாற்றிய அவரது மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டொனால்ட் ட்ரம்பை பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை

Related Posts