தருமபுரியில் நடைபெற்ற வாக்குபதிவில் முறைகேடு 

தருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும்   பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தமேடு கிராமத்தில் 4 ஆயித்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.  இவர்கள்  வாக்களிக்க 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்த பகுதிகளில், நேற்று பிற்பகலில் இருந்தே குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த முகவர்கள் வாக்களிக்க வருபவர்களிடம் கையில் மை மட்டும் வைத்துவிட்டு, அவர்களின் வாக்குகளை முகவர்களே பதிவு செய்த்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபோதிலும், ஒருவர் வாக்களித்ததாக கூறப்படுகிறது. புகாரை அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி 5 முறை குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மட்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் நத்தமேட்டில் உள்ள ஒரு வாக்குச்சாவடி இயந்திரத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திற்கு மட்டுமே வாக்கு விழுந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நத்தமேட்டில் இருந்த ஒரு வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா திருப்பிவிடப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது போன்று பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பதால், அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதுபோன்ற முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Posts