தற்கொலைப்படை தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் சொத்துக்களை முடக்க இலங்கை முடிவு 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தின் போது ஓட்டல்கள் மற்றும் தேவலாயங்களில் நடந்த தற்கொலை படை தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர்.

500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த இந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து அந்நாட்டில் பதட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் சொத்துக்களை முடக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல்களில் யார் யாரெல்லாம் ஈடுபட்டனர் என்பது குறித்தும் அவர்களின் சொத்துக்கள் குறித்தும் சிஐடி போலீசார் விசாரணை நடத்தி பட்டியலை தயார் செய்து வருவதாக அந்நாட்டு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts