தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தற்கொலை தடுப்பு  வாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நல வாழ்வு இயக்கம்,  தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் சார்பில்,  உலக தற்கொலை தடுப்பு வாரம் 3வது நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாட்ட ஆட்சியர் ராஜசேகரன்,  ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

Related Posts