தலைவர்களின் குடும்பத்தினரை அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது : ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக  அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக  அடைத்து வைத்திருப்பது,  ஏற்க இயலாததும் அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது எந்த விதமான தண்டனை அளிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துவதாக அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

Related Posts