தலைவர்கள் தோற்றுவிட்டனர் : ஐ.நாவில் கிரேட்டா துன்பெர்க் ஆவேசம்

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் உலக நாடுகளின் தலைவர்கள் தோற்றுவிட்டதாக ஐ.நா சபையில் இளம் சூழலியல் போராளி ஆவேசமாக குற்றம்சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது பொதுக்கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில் பருவநிலை உச்சி மாநாடு தொடர்பான கூட்டத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சூழலியல் போராளி கிரேட்டா துன்பெர்க் உரையாற்றினார். அப்போது, பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் உலக நாடுகள் தோற்றுப்போய்விட்டதாக அவர் சாடினார். வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளம் தலைமுறையை ஏமாற்றிவிட்டதாக கூறிய அவர், மிகப் பெரும் அச்சுறுத்தலுக்கு இது வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.  பணம், பொருளாதார வளர்ச்சி என்ற கற்பனை உலகை குறித்து மட்டுமே உலக நாடுகள் சிந்திப்பதாக அவர் தெரிவித்தார். மாசு வெளியேற்றத்தை அடுத்த 10 ஆண்டுகளில் குறைக்கும் உலக நாடுகளின் திட்டம் பாதியளவு மட்டுமே பயன்தரக்கூடியது என்றும், இது குறித்து சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துன்பெர்க் வலியுறுத்தினார்.

Related Posts