தவறான வாழ்க்கை முறையால் 30 வயதிலேயே இந்தியர்கள் உயிரிழப்பு

தவறான வாழ்க்கை முறையால் 30 வயதிலேயே இந்தியர்கள் உயிரிழக்க நேரிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான ஹெல்தியன் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 30 முதல் 44 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தவறான  வாழ்க்கைமுறைப் பழக்கங்களால் கொழுப்பு சேர்த்தல், உடல் பருமன், இதய நோய் என பலவகையான லைஃப் ஸ்டைல் நோய்களை சந்திப்பதாக கூறப்பட்டுள்ளது. பெண்கள் 50 முதல் 59 வயதிற்கு இதுபோன்ற நோய்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தை உண்டாக்கும் என்றும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி, உலகம் முழுவதும் 60 சதவீதம் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 44 சதவீதம் இளம் வயதில் இறந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. அதில் பெரும்பாலானோர் இறப்பிற்கு, வாழ்க்கை முறையின் தவறான பழக்கங்களே காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது.

 

Related Posts