தவறுதலாக எலி மருந்து சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே தவறுதலாக  எலி மருந்து சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் – பாரதி தம்பதியின் குழந்தையான தேவிஸ் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது எலிக்காக வைக்கப்பட்டிருந்த மருந்தை எடுத்து குழந்தை  சாப்பிட்டுள்ளான். சிறிது நேரத்திலேயே குழந்தை மயங்கி விழ, மருத்துமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

 

Related Posts