தஹில் ரமாணி இடமாற்றத்தை குறித்த வழக்கு தள்ளுபடி

தஹில் ரமாணி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமாணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தார். தஹில் ரமாணி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர் கற்பகம் சார்பில் கடந்த 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தஹில் ரமாணி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறிய நீதிபதிகள், தஹில் ரமாணியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு விட்டதால் வழக்கை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

Related Posts