தஹில் ரமாணி முடிவை மதிக்க வேண்டும்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி கொலிஜியத்தின் முடிவை மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

ராஜினாமா கடிதம் அளித்தது கொலிஜியத்தின் முடிவை அவமதிக்கும் செயல் எனக் கூறும் பார் கவுன்சில், தஹில் ரமாணி இடமாற்றத்திற்கும், குஜராத் பில்கிஸ் வழக்கிற்கும் தொடர்புபடுத்தி பரப்பப்படும் தகவல் தவறு என தெரிவித்துள்ளது. மும்பை, சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றியதுபோது, அதனை ஏற்றுக் கொண்டது போல, மேகாலயாவுக்கு மாற்றியதையும் தஹில் ரமாணி ஏற்க வேண்டும் என அந்தக் கவுன்சில் கூறியுள்ளது. தஹில் ரமாணி மற்றும் அஜய்குமார் மிட்டல் இடமாறுதல் முடிவுக்கு விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை தேவை எனவும் பார் கவுன்சில் கூறியுள்ளது

Related Posts