தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம், ஆப்கான் போராளிகளை தேர்வு

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம், ஆப்கான் போராளிகளை தேர்வு செய்து வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் தாக்குதல் ஆப்கானிஸ்தான் போராளிகளை பாகிஸ்தான் தேர்வு செய்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் தேர்ந்து எடுத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிதுள்ளது. விழாக் காலங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Posts